தூது செல் துணையே

தூது செல் துணையே....

என் மனக் கதவை திறந்திடவே அவன் சுவாசம் வேண்டுமடி சகியே....
என் மௌனங்களை உடைத்திடவும்
அவன் மொழிகள் என்னை ஆள வேண்டுமடி
சகியே.....

அனுதினமும் கரைகிறேன் அவன் நினைவிலே
எனை மறந்தே நித்தம் தொலைகிறேன்
அவன் உயிரிலே.....
வேண்டிடா வரங்களும் கிடைத்ததடி சகியே....
நான் வேண்டிய வரமவனும் எனை விட்டுவிலகிப்போனதேனடி சகியே.....

விலகல்கள் தந்தும் விலகாமல் தொடர்கிறேன் அவன் நிழலாகவே....
வலிகள் எனை பிளந்தும் அவன் வழியோடு செல்கிறேன் துணையாகவே...
அவன் நடையோடு துணையாகிறேன்
ஒரு பொழுதேனும் பிரியாமல் இணையாகிறேன்....

அவன் முன்னே என் வார்த்தைகளும் ஊமையாகுதடி....
இதுவரை இல்லாத நாணமும் கவர்ந்தென்னை இழுக்குதடி....
என் மனக்காதல் சொல்லிடவே காற்றாக நீயும் மாறியே தூது செல்வாய் என் துணையே....
அவன் மறுத்தாலும் என் காதல் அவனிடத்தில் விட்டு வருவாய் என் சகியே.....

எழுதியவர் : அன்புடன் சகி (25-Nov-16, 9:59 pm)
Tanglish : thootu sel thunaiye
பார்வை : 235

மேலே