நொடி முட்கள் நிற்பதில்லை

கவிக்கருவின் விளக்கம் :
---------------------------------------------------------------------
காலம் கடந்துக் கொண்டிருக்கிறது ....தடைகள் ஏதுமின்றி .தன் செயலில் மாற்றமின்றி இயற்கை நிகழ்வுகள் தொடர்கிறது . மனிதனின் நடைமுறை செய்முறைகள் மாறினாலும் கடிகாரத்தின்
முட்கள்போல நொடியை நிமிடம் துரத்துகிறது ....அதுவே நமக்கு வாழ்கின்ற காலத்தைக் காட்டுகிறது ...வகுத்து வாழ்ந்திட உதவுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நொடி முட்கள் நிற்பதில்லை ....
@@@@@@@@@@@@@@@@@@@@@

நொடி முட்கள் நிற்பதில்லை ....
நிமிடமும் துரத்தாமல் விடுவதில்லை !
ஒளியும் பிறக்கிறது கதிரொளி வீச்சால்
இருளும் தொடர்கிறது சூரியன் சுழல்வதால்
புவியின் நிலையும் நிலைத்திருப்பதால் !
இயற்கையின் நிகழ்வாக இரவுபகல் ....
வியத்தகு விந்தைகளில் விளையும் நிகழ்வு
ஓய்வில்லாக் காலமும் ஒருபோதும் நிற்காது
தலைமுறை வளர்ச்சி கருவறையின் ஆக்கம் !
தேய்கின்ற​ ​ஆயுளை அறிந்திடும் அளவுகோல்
கூடுகின்ற வயதும் வருடங்களின் கூட்டலால் !
​விரைந்திடும் ​முதுமை இளமையை விரட்டு​து
​கரைந்திடும் காலம் கடமையைச் செய்கிறது !
வீணாகும் நேரங்கள் வேண்டினாலும் திரும்பாது
எரித்திடும் உடலும் ஏங்கினாலும் கிடைக்காது ​!
முன்னோர்​ முதியோர் நாமும் பின்னாலே
புரிந்தோர் அறிவர் பிறப்பை இறப்பையும் !
தொடரும் உறவுகள் நொடியின் பிம்பங்கள்
மலர்ந்திடும் நட்புகள் நிமிடத்தின் நிழல்கள்
நிற்காத சுழற்சிகள் எவரின் வாழ்விலும் !

பழனி குமார்
25.11.2016

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-16, 8:00 am)
பார்வை : 110

மேலே