நான் காணும் வாழ்க்கை
சொல்லி வருவதில்லை காதல்
சொல்லாமல் தெரிவது காமம்
அளவான காமம் சுகம் தரும் மோகம்
அடங்கா காமம் அழிவுதான் தந்திடும்
பசித்து புசித்தல் உடலுக்கு உறுதி
இச்சைகள் அடக்கிட புலப்படும் ஓர் புதுமை
கடவுளுடன் உறவு கொள்ள
காட்டிடும் அதுவே ஓர் பாதை
தெரிந்திடும் அப்பாதையில்
பயணம் மேற்கொள்ள
அடைந்திடலாம் பேரின்ப எல்லையை
மிருகங்களோடு வாழ்ந்திடலாம் தோழா
ஆனால் மிருகமாய் மாறிவிடாதே
மிருகங்கள் அறியா நன்மை தீமை
மனிதப் பிறப்பின் ரகசியமும் இதுதானே
மிருகங்கள் மனிதன் போல் வாழ்ந்திடலாம்
தோழா மனிதன் ஒரு போதும்
மிருகமாய் மாறி விடக் கூடாது
மாறினால் அழிந்திடும் மானிட ஜாதி