கனவு

அது ஒரு முடிவில்லா கனவு
தினம் தினம் தொடரும்.!

சுகமாக சில
சுமையாக சில
புன்னகையாக சில
புலம்பலாக சில

அளவாய் சிரித்திட வைக்கும் சில
அகோரமாய் அழுதிட வைக்கும் சில
விழிப்பு நிலையிலும் நினைவாய் சில
விழித்தவுடன் மறப்பதாய் சில

முகம் மலர்வதாய் சில
முகம் சுளிப்பதாய் சில
லட்சியமாய் சில
அவலட்சனமாய் சில

அது ஒரு முடிவில்லா கனவு
தினம் தினம் தொடரும்.!

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (26-Nov-16, 8:16 pm)
Tanglish : kanavu
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே