கருப்பு பணம்

அந்நியர்களின் ஆட்சியை நீக்கி
நம்நாட்டின் அதிகாரிகளை
நாமே உருவாக்கினோம்...!!!
ஆட்சியை பிடித்து
ஆணவக்காரர்களிடம் அளித்து விட்டோம்...!!!
நாட்டின்
நலனுக்காய்
நல்கப்பட்ட பணத்தை சிறிதும்
நாணயம் இன்றி தன் வீட்டின் நலனுக்காய் சேமித்தான்...!!!
தாய் நாட்டில் வளர்ச்சியை உண்டாக்காமல்
தன் வீட்டில் வசதியை உண்டாக்கினான்...!!!
பாலங்கள் கட்டாமல் தன்
பண பலங்களை அதிக படுத்தினான்...!!!
கண்ணீரை கண்டும்
கடமையை செய்ய
கையூட்டு கேட்டான்...!!!
பணங்களை சேர்ப்பதாய் நினைத்து
பாவங்களை சேர்க்கிறான்...!!!
மானிடா,
நீ சேர்ப்பது கருப்பு பணமாய் இருக்கலாம்
கல்லறையில் உன்னோடு ஏதும் இருக்காது...!!!