போராட்ட வெற்றி
யாரை எரிக்க
சூரியன்
நெருப்பேந்தி
தினம் நடக்கிறான்..
யாரைப் பொசுக்க
வானம்
மஞ்சள் கொழுந்து எரியும்
பந்தத் தணல் பிடித்து
பகல் வீதிகளில்
உடல் அலைகிறது
யாரைக் கசக்க
காற்று
சூறாவளி சுழன்று
பூமிக்குள் சில பொழுது
பேயாட்டம் போடுகிறது
யாரை மிதிக்க
பாதங்களோடு
உடல் கூடுகள்
அவசரம் அணிந்து
பயணம் பதிக்கிறது
போராட்ட வெறியோடு
புதுக் குத்தீட்டி
கூர் தீட்டுகிறது
வெற்றி
கிட்டும் வரை
இல்லை
வெந்து சாகும் வரை..
உள்ளே நெருப்பு
உயிரோடு
இருக்கும் வரை...!