உயிர்மூச்சு தேடி
ஒரு சூரியப் பறவையின்
வானளந்த பறத்தல்
ஏங்கி
சுருண்டு கிடக்கிறது
விடியலின் பூமி...
மலர் முகம்
வேண்டிப்
பனித் துளி தாங்கி
விரிந்து கிடக்கிறது
இளங்காலை மேனி...
தவிர்த்துப் பழுகுகிற
சூரியனின்
மேக மறைவுகளோடு
அழுது புலம்புகிறது
மழைக் கால வானம்...
காற்றின் பாஷையில்
கவிதைகளை அல்ல
உயிர் மூச்சு தேடி
துடித்துத் தவித்து
அலைகிறது
ஜீவராசிக் கூட்டம்...
நல்ல பகல்
நலம் பாடும் குயில்
யாவிற்கும் நிஜம்
காலை சூரியன் தான்...
நிழலின் சுவடுகளுக்கும்
கூட...!