வெற்றியின் திறவுகோல்
ஒரு கனவை
கவிதை செய்யவும்
கவிதையை
கண்ணில் சொல்லவும்
கண்களுக்கு
வண்ணம் தெளிக்கவும்
வண்ணங்களை
வசந்தம் விரிக்கவும்
வசந்தத்தை
பூக்கள் படர்த்தவும்
பூக்கள் சிரிக்க
தாய் மடி கொடுக்கவும்
தாய்மடி
தவழ்ந்து
அசதி குளிக்கவும்
அசதி களைந்து
உழைத்துக் களைக்கவும்
உழைப்பின் வாசனை
வியர்வை தெளிக்கவும்
வியர்வைத் துளிகளாய்
உதிரம் வடிக்கவும்
உதிரம் உலவும்
நாளம் நிரப்பவும்
ஆக மொத்தமாய்
என் சுவாசம்
கடின உழைப்பு
என் சுதந்திரம்
வெற்றிச் சிரிப்பு...
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
முயற்சியே
வெற்றியின்
முதல் திறவுகோல்...!