காதல் பசி

என்னவளே !
ஏக்கங்களும்
எதிர்பார்ப்புகளும்
எனக்குள் மட்டும்தான்
என்றிருந்தேன் !

உனக்குள்ளும் அது
ஒழிந்திருப்பதை
உன் ஒற்றைப்
பார்வையில்
கண்டு கொண்டேன் !

நீ வார்த்தைகளில்
சொல்லாமல் மறைப்பதை
உன் கண்கள் எனக்கு
காட்டிக் கொடுத்துவிட்டன !

எத்தனை நாள்தான்
ஏக்கத்தில் கழிப்பது ?

என் நோய்க்கு
நல் மருந்து நீ !
என் கவிப்பசிக்கு
அறுசுவை
விருந்து நீ !

கொடி பூத்த
மலரே ! என்
மடி சாய நீ வா ! வா !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (29-Nov-16, 9:53 am)
Tanglish : kaadhal pasi
பார்வை : 92

மேலே