உன்னை அப்படி அழைப்பது
மனிதா ..?
நீ ஒரு வீடு கட்டுவதற்காக ......
எங்களின்பல நூறு .......
இருப்பிடங்களை அழிக்கிறாய்
நாங்கள் ....
பறந்த்திடுவோம் என்ற ....
நம்பிக்கைதான்...
சண்டையிடுவதற்கு .....
சக்தியில்லாதவர்கள் .....!!!
இனத்தை .....
அழிப்பவனை இனவாதி
என்றால் ......
நீ பிற இனத்தையல்லவா ...
அழிக்கிறாய் ...
உன்னை அப்படி அழைப்பது ..
தெரியவில்லை ...?
&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்