​தொலைந்து போன நாட்கள்

கலைந்து போன மேகங்கள் வானிலும்
தொலைந்து போன நாட்கள் ​வாழ்விலும் !
கூடிவாழ்ந்து பாடிமகிழ்ந்த பொழுதுகளும்
நாடிவந்த நட்புடன் நகரை சுற்றிவந்ததும் !
அறியாப் பருவத்தில் அரும்பிய காதல்களும்
புரியாக் காலத்தில் விரும்பியதன் விளைவும் !

நிலவொளி நேரத்தில் கடற்கரை மணலில்
கரவொலி எழுப்பி கூட்டங்கள் கேட்டதும்
பண்டிகை நாட்களில் புத்தாடை அணிந்து
நகர்வலம் சென்று அகமகிழ்ந்த நேரமும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது
தூயவர்கள் நிறைந்த தலைவர்களை கண்டது !

சுவையான உணவை கலப்படம் இல்லாது
உண்டு மகிழ்ந்து நோயின்றி வாழ்ந்ததும்
திரும்பாத நாட்கள் நிச்சயம் நானிலத்தில்
தொலைந்த நாட்களே கலைந்த மேகங்களே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Nov-16, 9:13 pm)
பார்வை : 419

மேலே