தேடல் --முஹம்மத் ஸர்பான்

நீண்டு கொண்ட செல்லும் பாதையில்
வாழ்க்கையெனும் மிதிவண்டி
பயணத்தை இடையில் நிறுத்திக் கொள்கிறது
மூச்சுக் காற்றால் நிரம்பிய பலூன்கள்
தூசு பட்டு சிலவேளை உடைந்து போகிறது
தொடுவான் பறவைகளுடன் போட்டியிட்டு
ஆயத்தமாகும் காற்றாடிகள் தொடங்கும் போதே
மரக்கிளைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றன
சிட்டுக்குருவியின் எச்சம் பட்டு
பூவில் அமர்ந்த பனித்துளி மறைந்து போகிறது
இரவில் உதிக்கும் சந்திரன்
பெளர்ணமி எனும் பெயரில்
காலுடைந்து மேகங்களுக்குள் ஒளிகிறது
மலைக்குன்றுகளை கடந்து போகும் காற்று
இறந்து போன கலைகளை நினைக்கின்றது
யாருமில்லாத பாலைவனத்தில் பூத்த
அதிசய பூக்களை கொஞ்சம் ரசித்து
வஞ்சத்தை தீர்க்கின்றது கரச மேடுகள்
சமுத்திரத்தில் தொலைந்த குண்டூசியை
தேடிப் போகிறது எனது நிழல்கள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-Nov-16, 8:00 am)
பார்வை : 237

மேலே