தேடு

மண்ணுலக வாழ்விற்குப் பொருளைத் தேடு!
***மகிழ்வாகும் இல்வாழ்வு நாளும் ஓடு!
விண்ணுலக வாழ்விற்கோ அருளைத் தேடு!
***வித்தாகு மான்மீக மிதுகண் கூடு!
நுண்ணறிவு பெற்றிடவே குருவைத் தேடு!
***நொந்தமனம் தெளிவுபெற உதவும் ஏடு!
திண்மையுடன் உள்ளமதில் இறையைத் தேடத்
***தீவினைகள் தோற்றோடக் காண்பாய் நெஞ்சே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Nov-16, 12:06 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 68

மேலே