என்பார்வையில் இரக்கம்

என்பார்வையில் இரக்கம்

உணர்வோடு கலந்து
உள்ளத்தோடு மகிழும்
பிரித்தறியா அன்பின்
முற்றுப்போலி இரக்கம்

அன்பாய்த் தெரியும் இரக்கமும்
இரக்கமாய்ப் போன அன்பும்
என் தவறான புரிதல்களால்
என்னில் தடுமாறிய உறவுகளால்
உறவை பிரிப்பதும் சேர்ப்பதுமாய்
இன்றும் சாபமாய் என்னில்

-மூர்த்தி

(பெறப்படுவது அன்பா? இரக்கமா? பிரித்தறியும் வழியெதுவோ?)

எழுதியவர் : moorthi (30-Nov-16, 12:31 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 80

மேலே