நகர வாழ்க்கை

நீண்ட நாள் கழித்து
நெருங்கிய தோழியை சந்திக்க
நெடுந்தொலைவு சென்றிருந்தேன்
நகர மோகத்தால்!!

நீல வண்ண சுடிதாரில்
நெற்றி நிறைய பொட்டிட்டு
முகம் நிறைய சிரிப்பும்
தலை நிறைய பூவுமாய்
பார்த்த நியாபகம்
நீண்ட நாள் முன்பாக!!

என்னை கண்ட பொழுதிலே!!
கட்டி அணைத்த அணைப்பிலே
கண்டு கொன்டேன்
நகர வாழ்க்கை நரக வாழ்க்கையென!!

எழுதியவர் : கோப்பெருந்தேவி (30-Nov-16, 2:32 pm)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
Tanglish : nagara vaazhkkai
பார்வை : 163

மேலே