சாதி எனும் தீ
ஆதி மனிதனிடமும்
இல்லா
சாதி எனும்
அவலம்
பாதியில் வந்ததேன்?
உழைக்க
ஒரு வர்க்கமும்
அவ்வுழைப்பில்
பிழைத்துத்
தழைக்க
ஒரு வர்க்கமும்
அடக்க
ஒரு வர்க்கமும்
அடங்கி ஒடுங்க
ஒரு வர்க்கமும்
தடங்கலின்றி
தலைமுறைகட்கு
இதை சாதிக்கத்
தொடங்கியதே
இந்த சாதி
ஒருவன் பெற்ற
குணத்தின் சிறப்பாலோ
தனித்திறத்தின் சிறப்பாலுமன்றி
வெற்றுப்பிறப்பால்
உயர்வு தாழ்வு சொல்வது
சாதியே
பிறப்பில் தொடங்கி
உயிர் பிரிந்தாலும்
பிரியாது
இடுகாடு வரை
விடுபடாது
சிதைக்கு
மூட்டிய தீயிலும்
சிதைந்திடாது
இந்த சா(கா)தீ.

