பணத்தின் மறுபக்கம்

சேமித்த காசையெல்லாம் -
செலவு பண்ண தயங்குற !
வட்டிக்கு ஆசைப்பட்டு -
வங்கியில அடைக்கிற !
வாயூற நாவூற - கடை
வாசல் வரை வந்து விட்டு -
வாய்க்கு ருசியாக ;
வாங்கி தின்ன தயங்குற !
காசை நினைத்து கலங்குற !
கடையை விட்டு விலகுற !
பசியை கூட ஓரங்கட்டி -
பட்டினியில் கிடக்கற !
நொந்து போன உடம்பும் இப்போ ;
நோய் வந்து கிடக்குது !
வட்டியிலே வந்த பணமும் ;
வைத்தியத்தில் கரையுது !
உதவி என்ற பெயரிலே ;
உறவுகளும் வருகுது !
உன் பார்வை முன்னாலே ;
உல்லாசமாய் வாழுது !
படித்தவனும் அலையறான் !
பாமரனும் அலையறான் !
பணத்தை மட்டும் லட்சியமா ;
பைத்தியமா அலையறான் !