மக்கள் தீர்ப்பு
அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு
வந்த பின்,
மக்கள், ஆட்சியின்
மகத்துவத்தை
அடியோடு மறந்து
மக்களை இலவசங்களுக்கு
ஈ என்று இளிக்கும்
கூட்டமென்று கனித்து,
தன் உறவுகளுக்காக
ஊழலில் திலைத்து
எந்த பழிபாவத்திற்கும்
அஞ்சாமல்
ஏமாற்று அரசியலில்
ஐக்கியமாகி விட்ட,
உள்ளம் ஊனப்பட்ட
ஒரு ஓநாய் கூட்டம்,
மக்கள் மன்றத்தில்
ஆடும் கபட நாடகம்,
நிரந்தரம் என்றே,
மனக்கோட்டை கட்டி,
பல கற்கோட்டைகள் யாவும்,
மயான பூமியாய்,
காட்சிப் பொருளாய்,
நிற்பதை மறந்து,
தனக்குப் பின்னால்
மக்கள் தீர்ப்பு என்ற
பள்ளத்தாக்கு இருப்பதை
உணராமல்
ஆடி
அடங்கி விடுவர்
ஆறவாறமின்றி.
#sof_sekar

