உளமிரு ஆசை பல விகற்ப பஃறொடை வெண்பா ஓரிரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தால்
உளமிரு ஆசை ..
பல விகற்ப பஃறொடை வெண்பா
ஓரிரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தால் என்தந்தை
பூவுலகைக் காண்பதற்கு வாய்ப்பின்றிப் போயிருக்கும்
மூவாறு ஆண்டுகள் ஏழ்மையை பார்த்திருக்க
காசின்றி பத்துவரை கல்விநான் கற்றதற்கு
காமராசன் நான்மறவே னே
பசித்திருக்கும் வேளையிலே பாத்திரத்தில் அன்னமில்லை
காலி வயிற்றுடன் பள்ளிக்கு சென்றவுடன்
கண்ணயர்ந்தி ருப்பேனே கண்டதும் ஆசிரியர்
திட்டியெனை வாயிலியே நிற்கவைக்க சிந்திய
கண்ணீரை நான்மறவே னே
எத்தனையோ துன்பங்கள் சந்தித்து நின்றாலும்
ஓர்நாளும் தற்கொலை செய்கலேன் என்றோர்
சபதத்தை அன்றேநான் மேற்கொண்டு இன்றுவரை
வாழ்ந்திருக்க முற்பிறப்பில் செய்திட்ட தீவினைகள்
காரணமோ நானறியே னே
உளநாள் வரையில் உளதொரு ஆசை
அகத்திரு ஆத்மா கொடுத்தவன் ஈசன்
பகலோ இரவோ எதுவென்றா லும்நான்
படுத்துறங்கும் போழ்தினில் வந்தீச னென்னுயிர்
கொள்வானெ னின்மகிழ்வே னே
03-12-2016
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
