அகர வரிசையில்

​அண்டத்தின் நிகரிலா அழகுமொழி நம்மொழி ​
​ஆதவனாய் அகிலமே அறிந்திட்டத் தமிழ்மொழி !
இ​னித்திடும் இலக்கியங்கள் ஈர்த்த​து இவ்வுலகை ​
ஈ​டேறியது உள்ளங்கள் ஈடில்லா காவியங்களால் !
​உறவுகளாய் மாற்றிடும் எம்மொழி பேசுபவரையும்
ஊன்றுகோலாய் மாறும் உலகைச் சுற்றுவோர்க்கு !
எதுகைமோனை வரிகள் மயக்கிடும் எவரையுமே
ஏற்றிடுவார் கற்றிடுவார் எளிதாக தமிழ்மொழியை !
ஐந்திரம்​ கொஞ்சிடும் மொழியெனில் தமிழொன்றே
ஒலிநயமும்​ பொருள்நயமும் மிக்கது தமிழ்தானே !​
ஓங்கு​புகழ் மொழியென்றும் புவியில் தமிழொன்றே
ஒள​டதம் அகிலத்திற்கே ஒளவையின் அறநெறிகள் ​!

​( அண்டம் = பிரபஞ்சம் , ​ஐந்திரம் = அழகுள்ள )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Dec-16, 2:28 pm)
பார்வை : 231

மேலே