பொன் மகள் தனலட்சுமி வெண் முத்து அழகி

பொன் மகள் தனலட்சுமி
என்னவள் விந்தை மகள்
விண் தந்த பாவை
வெண் முத்து அழகி
குளிர் நிலவு முகம்
குங்குமப் பூவாய் சிவக்கும்
மஞ்சள் பூசி மயக்கும்
மனதை சுண்டி இழுக்கும்
அகம் நகும் விம்மும்
முகம் அன்பு மிகும்
தொட விரை உறும்
தொடு திரை போலே
பித்தைதனை படிய கோதி
பின்னல் இட்டுத் தொங்கல் இட
பின்னங் குதிக்கால் தொட்டு
பிறை வடிவில் தரை தொடும்.
வஞ்சி ஒளிர் சொர்ணம்
கொஞ்சும் தளிர் கன்னம்
மஞ்சள் பளிர் வண்ணம்
மிஞ்சும் மிளிர் சன்னம்
கண்கள் உண்ணீர் தடாகம்
வெண் விழிகள் பங்கயம்
சுந்தர கரு விழிகள்
சுழலும் இரு வண்டுகள்
சுழி அணி நெற்றியில்
சுடர் மணி திலகம்
விசயன் வில் என
விளங்கும் எழில் புருவம்
செவ்வந்தி மலர் செவிகள்
செந்தூரம் ஒளிர் தோடுகள்
விடைக்கும் கிளி மூக்கு அணி
படைக்கும் ஒளி விடி வெள்ளி
முகிழ்ந்தும் முகிழாத
முல்லை சிரிப்பு
முத்தெனவே ஒளிரும்
நித்திலம்
முக்கனி ரசம் ஊறும்
அதரம்
முக்கடல் சங்கமிக்கும்
சமுத்திரம்
பனி மலர் கனி மொழி
பவள செவ்வாய் தேன்
சுவை விழையும் சுட்டி
சுழன்று குழையும் ஒட்டி
செழுமை நிறைந்த கழுத்து
வழுமை திகழும் தோள்கள்
எழுமை கொண்ட தனங்கள்
முழுமை சேர் வனங்கள்
முன் புறம் மாங்கனி மிரட்சி
பின் புறம் பூரிக்கும் திரட்சி
நேர் புறம் பார்வை நீட்சி
நாற் புரம் நர்த்தன சுழற்சி
வாழை இளம் குருத்தாம்
வழுத்தப் பளிங்கு தொடைகள்
வளைந்து இணைந்து தழுவும்
வளை அணி பொற்கரங்கள்
குழிந்த குறு நாவல்
குவிந்த முன் வயிறு
மெலிந்த மின் இடை
மேடிட்ட அடி வயிறு
வாட்டம் பிணி போக்கும்
வாஞ்சை மிகப் பற்றும்
விரல்கள் பிஞ்சு வெண்டை
விரல் நகங்களோ பவழம்
நெற்றியில் வெண் நீர்
நெஞ்சில் குளிர் பன்னீர்
உதட்டில் ஊறும் இளநீர்
உடம்பில் உயிர் செந்நீர்
பண்ணமை சிலம்பு அணி
பாதம் புது மலர்
பதிக்கும் பத மலர்
விதிக்கும் பண் இசை
நிரதம் நடை அழகில்
பரதம் ஒயில் பயிலும்
பச்சை பட்டு உடுத்தி
பாங்குடனே மேல் உடுத்தி
பிச்சி பூ சரம் சூடி
பித்து ஏற்றும் பெண் அழகு.
பொருந்திய தரு தொடைகள்
நெருங்கிய உரு பாதங்கள்
மெட்டி அணிந்த விரல்கள்
மேன்மை நிறைந்த பெண்மை!