எது நட்பு
நிழல் போல் தொடர வேண்டும்,
சிரித்திடும் போது மட்டும் அல்ல - அழுதிடும் போதும் கண்ணீர் துடைக்கும்
நெஞ்சம் வேண்டும்,
புகழின் உச்சிக்கு நான் செல்லும் போது
பூரிக்கும் தாய் போல,
இயலாமையில் துவலும் போது
தந்தை மடியாக இருக்க வேண்டும்,
செய்யும் தவறை கண்டித்திடும் ஆசானாக
அமைந்திட வேண்டும்,
இத்தனையும் ஒரு சேர
நட்பு கிடைத்துவிட்டால் - பின்
வாழ்க்கையில் பெறுவதற்கு,
புதிய வரமும் உண்டோ!