கலப்பு திருமணம்

கலந்தது இரு மனம்,
இரு வேறு செடியில் பூத்த
மலர்கள் என்பதனை அறியாமல்.....
மலர்ந்தது காதல்,

சாதி என்னும் சுவர் எழுப்பி
பிரிக்க நினைத்தனர் காதலை,
அன்பே சிவம் என்று அறியாதவர்கள்,

தோற்றுத்தான் போனது,
சாதி மத வெறி கொண்டோர்களின் எண்ணம்,

அழகாய் திருமணம் நடந்தது
இறவன் சந்நிதியில் - மேள
தாளம் இல்லை என்ற குறை
தீர்க்க ஒலித்தது - கோவில்
மணி ஓசை !!!

எழுதியவர் : MeenakshiKannan (5-Jul-11, 6:53 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 704

மேலே