பெண் சிங்கம்
ஒரு தி மு க நண்பரின் எழுத்து:
எதிரியாகவே இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... !!
நீங்கள் ஆளக் கூடாது என்றுதானே நினைத்தோம். வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே..!!
இந்த ஒற்றை வார்த்தை போதும் அம்மா.. உன் பெருமையை உலகம் சொல்ல..!
இனி எங்கே காண்போம் இதுபோன்ற பெருமை கொண்ட பேருயிரை..!!
இரட்டை இலை யில் இரண்டாவது இலையும் உதிர்ந்த து....
போய் வா நதியலை யே..
கள்ளமில்லை
கபடில்லை
பயமில்லை
சொன்னால் சொன்னதுதான்..
சொன்ன வார்த்தையில்
மாற்றமில்லை..
முன் வைத்த காலைப்
பின் வைத்ததுமில்லை..
எவர் வீட்டு வாசலிலும்
இறைஞ்சி நின்றதில்லை..
எவருக்காகவும்
எதற்காகவும்
எங்கேயும்
காத்திருந்ததுமில்லை..
ஜெ.ஜெயலலிதா
என்னும் நான்..
எனும் வார்த்தைகள்
இனி வரப் போவதுமில்லை..
போ..
போய் வா நதியலையே..
நீ
இருக்கும் பொழுது
தெரியாத
அருமையை
இனி..
நீ
இல்லாத
இடத்தில்
உணரும்
தமிழகம்..
ஒவ்வொரு
செயலின் பொழுதும்
நிச்சயம்
ஒரு கேள்வி வரும்..
அந்த அம்மா மட்டும்
இப்ப இருந்துதுன்னா?
அந்தக் கேள்விதான்
உன் சாதனை..
அந்தக் கேள்விதான்
உன் வாழ்க்கை..
போ..
போய் வா நதியலையே..
7 கோடி பேர் இருந்தும்
அனாதையாய்
உணர்கிறது
தமிழகம்..
ஒற்றை விரல்
சொடுக்கி
எவர் எம்மை
இனி
ஆட்சி செய்வர்?
இனி
எவர் வந்து
நிற்பர்
அந்த
வெள்ளைப் பால்கனியில்?
நீ
சரித்திரம்தான்..
காலம்
அதை நிச்சயம்
நிருபிக்கும்..
போ..
இனியாகிலும்
அமைதியாய்..
உன்னைச் சுற்றிலும்
இனி..
கயவர்கள் இல்லை..
வேடதாரிகள் இல்லை..
கபட நாடகங்கள் இல்லை..
வழக்குகள் இல்லை..
நிம்மதியாய்
கண்ணுறங்கு
வங்கக் கடலோரமாய்..
போ..
போய் வா நதியலையே..