அமைதி கடல்போல கடலோரம் கண்ணுறங்கு

இறைவியாய் உன்விழியோ வான்வெளியில் கீழ்நோக்கி ....
உன் உடலை காண்போரை நீ காண ....
கடல் அலைபோல் பலதலைகள் உனைக்கான ...
கரும் எறும்பாய் இளைஞர்கள் தலை உண்டு...
கார்கூந்தல் மகளீரின் தலை உண்டு ....
மயிரில்லா முதியோரின் தலை உண்டு ...
தலைகளிலே பலவிதங்கள் கண்டாலும் , அவர்கள் ...
முகங்களிலே சோகமெனும் ஒரு ரசம்தான் ....
இங்கோ இடமெல்லாம் மணம்வீசும் மண்வாசம் ....
மழையொன்றும் பெய்யவில்லை தமிழ்தாயே....
அதுஉனை காண்போரின் கனமான கண்ணீரே ....
உன்னுடலுக்கோ கடலோரம் இடமுண்டு ...
மக்கள் உள்ளத்தில் உனக்கென ஓரிடமுண்டு ...
மக்கள் நெஞ்சத்தில் உன்நினைவு வாழும்வரை ....
உன்னை அழிக்க யாராலும் முடியாது ....
மக்கள் நலம்காக்க உயிர்வாழ்ந்த கண்விழியே ....
அமைதி கடல்போல கடலோரம் கண்ணுறங்கு ....
அமைதி கடல்போல கடலோரம் கண்ணுறங்கு ....