அஞ்சலி
அஞ்சலி.
ஆதிக்க ஆண்களின்
மத்தியிலே,
அஞ்சாது
வீரநடை போட்ட
சேலை கட்டிய சிங்கம்
துயில் கொண்டது,
இதயத்தில் சுமந்த
தன் பிள்ளைகளின்
அழுகுரலை ஆற்ற
முடியாமல். கண்
மூடிக் கொண்டது
ஏனோ.
.
கண்ணீர் வெள்ளத்திற்கு
அணையிட தெரியாமல்
உன். பிள்ளைகள்
தவித்திருக்க
நயவஞ்சகர்களின்
பிடியில். இருந்து
விடுதலைதான்
இந்த உறக்கமோ
இனி
அலை ஓசையும்
அம்மா என்றே
அடித்து அழும்.
தாலாட்ட. எழும்.
.