கர்வம்,கம்பீரம்,ஆணவம்,திமிர்

கர்வத்தோடும் கம்பீரத்துடனும்
ஒரு ஆண்
நடந்து கொள்வது
நேற்றின் பிம்பமாகவோ
நாளையின் வீரமாகவோ
இருக்கலாம்.!

அந்த வீரம் மெச்சும்படி அமைந்தால்
ஆணினத்துக்கு
பெருமை....................!

ஆணவத்தோடும், திமிரோடும்
ஒரு பெண்
நடந்து கொள்வது
விரும்பியோ,
வேண்டியோ
அல்ல.

அந்த திமிர் மட்டும்தான்
பெண்ணினத்துக்கு
தற்காப்பு..!

எழுதியவர் : செல்வமணி (6-Dec-16, 8:00 pm)
பார்வை : 905

மேலே