தனலட்சுமி

தன்னிலை மறந்தேன் தோழி -அங்கே
தனிமையை ரசிக்கிறேன்
பார்த்த பரவசம் இவளோ
புன்னகை சிறுதுளி

இதழ்களின் ஓரங்களில்
இடம் மாறி இசைகிறது இனிவரும்
தென்றலும் இவளோடு போகவே
கனம் கண்களை கொண்டுதான்
காதலி கனவில் வாழ்கிறேன்

தனலட்சுமி முகம் பேசும்
ஒலி வீசும் கண்களே உடன்
இவளை அலங்கரிக்க தேவை இல்லை

அலங்காரமே அசந்து போகும்
அழகென்ற அமுதே அழகே அன்பே
தனம் யாவும் கொண்டவளே - இவள்
குணம் நாடி ஒருத்தியம்மா கோடியிலே

கைகளின் வலையல்கள் கவி பாடும்
கண்களின் தூரமே இசை மீட்டும்
இன்பமே இமை யாவும்

உண்மை வாசமது மல்லிகை மனமாய்
ஊரெங்கும் வீசுதே இவளின்
கூந்தலை சேந்ததோ மல்லிகை

வாசமே மயங்கி போக
கருங்கூந்தல் கொண்டவளே பேரழகே
பெண்மயிலே பின்னழகு இடை தாண்டி
ஆடுதடி அலைபோல கூந்தலடி

எந்தவொரு இயற்கையுமே இன்று முதல்
இனியொருத்தி இவள் போல இருப்பாளோ
என்றவொரு கேள்வியும்
இயற்கைக்கும் வருமென்றால் -அதில்
வியப்பொன்றும் இல்லையடி ... ,

- கலைவாணன்

எழுதியவர் : கலைவாணன் (6-Dec-16, 9:54 pm)
பார்வை : 153

மேலே