இதிலென்ன
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
உனக்கு சொந்தங்கள் இருந்தும்
உன்னால் யாருக்கும் உதவ
எண்ணாமல் இயலாமல் இருந்தால்
உன்னுடைய வசந்தத்தில்
ஒன்றுமில்லை
ரசிப்பதற்கு.!
இத்தனை
மரியாதையும்
இத்தனை
உயர்வும்
அடைந்தும்
பெருமை கொண்டு பேச
சொந்தமென்று
ஒன்றுமில்லை என்றால்
ஜெ யின் மரணத்தில்
என்ன இருந்தாலென்ன,
இல்லையென்றால் தான் என்ன?