எங்கே என் நாடு
பார்க்கும் இடமெல்லாம் பசுமை நம் கண்பரிக்கும் ...
வற்றாத நீரை கொட்டிய வானம்...
கையில் வாரி குடிக்கும் அளவுக்கு கேணி...
மலை குன்றுகள் நெஞ்சம் நிமிர்ந்து பாக்கும்...
மதிய வெயில் கூட மயங்கி வீசும்...
நாள் முழுவதும் தட்டானும் பட்டாம்பூச்சியும் தன்னை மறந்து விளையாடும்...
சிட்டுக்குருவியின் சத்தமோ பல கவிஞர்களின் கவிதை போல் தேனாய் செவி வந்து சேரும்...
சேவல் ஒலி செவி கேக்க கண்டாங்கிகாரி கஞ்சி எடுத்து வைக்க அதை எடுத்துக்கொண்டு காளைகளை பிடித்துக்கொண்டு ஏர் உழுத நேரம் இனி என்று நான் பாக்க நேரும்...
பொழுதுபோக்குக்கு ஆடுபுலி போதவில்லையென்றால் முறைப்பெண்ணுடன் பல்லாங்குழி...
காது குளிர வில்லுப்பாட்டு கவலை மறக்க கன்னிப்பாட்டு...
மாலை வந்ததும் தன்னவளின் தலையில் பசும்புல்லை வைத்துவிட்டு தோளில் ஏர்கலப்பை சுமந்துக்கொண்டு தன் எதிர்காலத்தை பற்றி தன்னவளுடன் மனம்விட்டு பேசி அவளை மனம் மயங்கவைக்கும் மன்னவனின் காலம் எங்கே போனது...
கருங்குயில் ஓசை கரைந்து போனதோ...
கார்காலம் அது மறைந்து போனதோ. ..
தன்மானம் காத்த விவசாயி எனோ அவமானப்படுகிறான்...
தன்னை மறந்து சடமாய் வாழ்கிறான்...
ஏய்ப்பவனெல்லாம் பிழைத்துக்கொள்கிறான்...
இறைவன் எனோ இதை இன்பமாய் காண்கிறான்...