உள்ளூரில் ஒரு காதல் கடல் தாண்டி ஒரு காதல்

என் பெயர் அர்ஜுன். நான் ஒரு ஜோலியான காலேஜ் மாணவன். அப்பா ஓரளவுக்கு பணம் சம்பாதிப்பதில் வல்லவர். அதனாலே எனக்கு கஷ்டம் என்பதெல்லாம் தெரியாது. நான் எப்பவும் துரு துருன்னு தான் இருப்பேன். அழகிலும் வீரத்திலும் அஜித் போலவும் அப்பாவி தனத்தில் சிவகார்த்திகேயன் போலவும் பெண்களை கொள்ளை கொள்வதில் சூர்யா போலவும் இருப்பேன். என்னை பற்றி நானே பெருமையாக பேச கூடாது. இப்படியாக என் வாழ்க்கை ரொம்பவும் எண்ஜோயாக போனது. அன்றுதான் அவளை பார்த்தேன். ஐயோ ஐயோ ஆனந்தமே என்ற பாடல் ஒலித்தது என்னுள். அவள் என்னவள் என்று தோண்றியது, என்றும் இல்லாத ஓர் ஆனந்தம் எனக்குள். எத்தனையோ பெண்களிடம் பழகி இருக்கிறேன். இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லையே. அவளிடம் பழக வேண்டும் என்ற எண்ணம் தூண்டியது. அவளை தொடர்ந்தேன் தொடர்ந்தேன் பல நாள் தொடர்ந்தேன். அவள் எல்லாரிடமும் அன்பாக சிரித்து சிரித்து பழகுகிறாள். குழந்தைகளை கொஞ்சுகிறாள். இன்று அவளிடம் பேச எண்ணி அவள் அருகில் சென்று "ஹாய்" என்றேன். பதிலுக்கு அவளும் "ஹாய்" என்று அதிக நாள் பழகியதை போல் சிறிதும் தயக்கம் இன்றி பேசினாள்.
"நான் அர்ஜுன் நீங்கள்".
"நான் லெட்சுமி. ஒரு சின்ன வேண்டுகோள், நீங்கள், போங்கள் என்றெல்லாம் மரியாதை எனக்கு வேண்டாம். நீ வா போ என்றே பேசலாம், அர்ஜுன்."

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றிலிருந்து நான் அவளுடன்தான் காலேஜ் செல்வேன் வருவேன். அன்று அவளிடம் அலைபேசி என் கேட்டேன் உடனே கொடுத்து விட்டாள். நான் சும்மா இருப்பேனா, வாட்சப்பில் அவளின் profile picture பார்த்தேன். ஆடைகள் குறைந்த அளவே காணப்பட்டது அவள் உடலில். "
"சும்மா நெய் குழந்தை மாதிரி இருக்கே" அப்படின்னு வாட்ஸப்பில் அனுப்பினேன். பதில் வர வில்லை. "கோச்சிக்கிட்டாலோ". கோச்சிக்கிட்டும். கோச்சிக்கிட்டும். காலையிலே பாத்துக்கலாம்."

காலேஜுக்கு செல்வதற்காக காத்து கொண்டிருந்தாள் வழக்கமான இடத்தில். நான் வந்ததும் அவள் நடந்தாள். என்னை எதிர்கொள்ளவில்லை.
"லெட்சுமி என்ன என் மேல் கோவமா" என்றேன்.
"எனக்கு என்ன உரிமை உன் மேல் கோப பட" என்றாள் லெட்சுமி.
உடனே இதுதான் சமயம் என்று "என் காதலியாய் கோப பட உரிமை இருக்க கூடாதா?" உடனே அவள் சிரித்தாள்.
"இந்த மரமண்டைக்கு இப்பதான் புரிஞ்சதா?" என்றாள் லெட்சுமி. அவளும் என்னை காதலித்திருக்கிறாள் என்று புரிந்தது அவள் சொன்ன மாதிரி என் மரமண்டைக்கு. அன்றிலிருந்து எங்களுக்குள் நட்பு காதலாகி நாளுக்கு நாள் அதிக நட்புடன் பழகினோம். அப்போதான் என்னுடைய கவலை இல்லாத வாழ்க்கைக்கு முற்று புள்ளியே லெட்சுமி என்பது தெரியாமல் போய்விட்டது. சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட ஆரம்பித்தாள். "லெட்சுமி, நீ உடுத்தும் உடை கவர்ச்சியாக இருக்கிறது, அப்படி கவர்ச்சியாக உடுத்தாதே." என்றேன்.
"என்ன அர்ஜுன் என் அழகை நீ மட்டும் தான் பாக்கணுமா, இல்லை என்னை காதலி என்ற பெயரால் அடிமை படுத்த பார்க்கிறியா" என்று ஏசினாள். மனசு ரொம்ப தொங்கி போய் விட்டது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். என்னிடம் பழகுவதை போலவே மற்ற நண்பர்களிடமும் பழகினாள். இது எனக்கு சரியாக படவில்லை. அவள் தனியாக வரும் பொது அவளை பார்த்து "ஆண் நண்பர்களை கொஞ்சம் குறைச்சிக்கோ லெட்சுமி." என்றேன். அவ்ளோதான் ருத்ர தாண்டவம் ஆடி விட்டாள். "நீ என்ன என் மேல சந்தேக படறியா. உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா. இனிமேல் என் மூஞ்சிலே முழிக்காதே" என்று காதலை தூக்கி எரிந்து விட்டு போய்விட்டாள். என் காதலுக்கு இரண்டு வருடம்தான் ஆயுள். அதுதான் என் முதல் செருப்படி.

அதோடு வாழ்வில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் ஓரளவுக்கு படித்து முடித்துவிட்டு தேவதாஸை போல் மூலையில் முடங்கி கிடந்தேன். வேலைக்கு செல்லாமல் ஆறு மாத காலம் வீட்டில் வெட்டியாய் பித்து பிடித்தவன் போல் இருந்தேன். என் அப்பா இப்படியே விட்டால் குட்டி சுவர் தான் என்றெண்ணி என்னை வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவுக்கு வேலை ஒன்றை பார்த்து அனுப்பி வைத்தார். அங்கே இறங்கியதும் ஒரே வெள்ளையர்கள் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தனர். அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் புன்னகை சிந்தி விட்டு சென்றனர். நம்ம ஊரில் இல்லாத ஒரு பழக்க வழக்கம். யாரிடமும் அன்போடும் உதவும் மனப்பான்மையோடும் பழகும் விதம் வந்த முதல் நாளே உணர்ந்தேன். நம்ம ஊரில் புதிதாக எவனாவது ஒருத்தன் வந்துட்டா போதும், அவனிடம்தான் தன் சேட்டைகளை செய்து கலாய்ப்பார்கள். ஏதாவது கேட்டால் ஜாடை பேச்செல்லாம் எழும்பும். அயல் நாட்டில் அப்படி இல்லாதது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

இடம் செல்ல முகவரியை காட்டி தான் கேட்டேன், அந்த வெள்ளைக்காரி என்னான்னா அவள் வேலை வெட்டியெல்லாம் விட்டு புட்டு என்னை ஏற்றி கொண்டு போய் வேண்டிய இடத்திலே விட்டுட்டா. இப்படியான விஷயங்கள் நடந்த போது என் மனம் மகிழ்ந்தது. மறுநாள் காலையில் எனக்காக என் அப்பா பார்த்து கொடுத்த வேலையில் சேர சென்றேன். அங்கே எனக்கு பயிற்சி அளிக்கும் மேட்பார்வை அதிகாரியாக ஒரு வெள்ளைக்காரி. நல்ல அழகு. என்ன சொன்னாலும் கேட்டாலும் புன்னகையே அள்ளி வீசுகிறாள். அவள் பெயர் ஜெசிகா. நான் செய்யும் தவறுகளை முகம் சுளிக்காமல் சுட்டி காட்டினாள். புதிய இடம் வேலைக்கும் புதுசு என்ற எண்ணமே எனக்கு தோண்றவில்லை, அந்த அளவுக்கு ஜெசிகா என் கூடவே இருந்து வேண்டியவற்றை செய்து கொடுத்தாள். என் மனம் அறிந்து புரிந்து கொண்டு நடந்தாள். முதலில் அவளிடம் பழக சற்று தயக்கமாக இருந்தது. நாளடைவில் தயக்கம் போய் அவளை உரிமையாக ஜெசிகா என்றழைக்க ஆரம்பித்து விட்டேன். அவளிடம் பழக பழக மெல்ல என் பழைய காதலை மறக்க ஆரம்பித்தேன். ஜெசிகா உடைகளில் குறை வைத்தாலும், பாசம் வைப்பதில் குறைவே இல்லை. வெள்ளைக்காரியிடம் தமிழ் பண்பாடு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கல்ல. எனக்கு அவள் மேல் ஒரு படி மேல் போய் காதலே வந்து விட்டது, ஆனால் அவள் எனக்கு ஒத்து போவாளா என்பது பெரிய கேள்விக்குறி. தமிழ் பண்பாட்டில் வளர்ந்த தமிழ் பெண்ணே என்னை தூக்கி எரிந்து விட்டாள். மறுபடியும் ஒரு முறை என்னால் காதல் தோல்வியை அனுபவிக்க முடியாது என்று சற்று விலகியே இருக்க முடிவு செய்தேன்.

அன்று நான் வழக்கம் போல் வேலைக்கு சென்றேன். அங்கே ஜெசிகா ஒரு அழகிய பரிசை என்னிடம் கொடுத்து "நீ இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது அர்ஜுன்" என்று ஆங்கிலத்தில் கூறினாள்.
"நான் உன்னை காதலிக்கிறேன் அர்ஜுன்" என்று தமிழில் கூறினாள். நான் அதிர்ந்தேன், அவள் சொன்ன விஷயத்துக்காக மட்டும் அல்ல, அவள் தமிழில் பேசியதை கேட்டு.
"ஜெசிகா நீ எப்படி தமிழெல்லாம்" என்றேன்.
"உனக்காக கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன்" என்றாள்.
நான் அவளிடம் என் கதை முழுவதையும் சொன்னேன். ஊத்திக்கொண்ட என் காதல் கதையை கேட்டு விழுந்து விழுந்து சிறிது விட்டு, இப்படி சொன்னாள். "உனக்காக நான் என்னை மாற்றி கொள்கிறேன்" என்றாள். உன் மனம் கஷ்ட படும் படி நான் நடந்து கொள்ள மாட்டேன் அர்ஜுன்" என்றாள். அதுவும் தமிழில் பேசினாள். அவள் பேசினதை கேட்டு உறைந்தே போய் விட்டேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் தத்தி தாவியது என் மனசு.

கடல் கடந்து ஒரு வாழ்க்கை கடவுள் அமைத்து கொடுத்திருக்கிறான். எடுத்த எடுப்பில் எல்லாருக்கும் ஏற்ற வாழ்க்கை அமைந்துவிடாது. அவர்கள் தாமே இன்னல்களை எதிர்நோக்கி அடைய வேண்டும். அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது. "டேய் அர்ஜுன் என்னதான் இருந்தாலும் நீ மச்சக்காரன்டா" என் உள்ள மனசு சொன்னது. எது எப்படியோ நான் வெள்ளைக்காரியிடம் அடி உதை வாங்க போறேன்.

எழுதியவர் : பவநி (9-Dec-16, 8:39 am)
பார்வை : 525

மேலே