தமிழ் மான் இல்லை

டேய் செல்லம் மானு, எங்கடா போயிட்டே?
@@@@@
யாரப் பாட்டிம்மா மானு-ன்னு கூப்பிடீங்க?
@@@@@
வாடி பொன்னி ; நல்லா இருக்கறயா?
பஞ்சாப்புலே எம் மவன் பாரி கலக்டரா (மாவட்ட ஆட்சியர்) இருக்கறான்னு சொன்னம் இல்லையா, அவன்தாண்டி எம் மருமவ மலர்க்கொடியையும் எஞ் செல்லப் பேரனையும் அழச்சிட்டடு வந்திருக்கறாண்டி பொன்னி. அவனோட மேலதிகாரி தங்கமான மனுசனாம். அவுரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி தமிழ் நாட்டில வேல பாத்தவராம். நம்ம தஞ்சாவூரு தமிழ் பொண்ணத்தாங் கல்யாணம் பண்ணிருக்கறாராம். வீட்டிலெ தமிழ்தாம் பேசறாராம். தெனம் குளிச்சதும் திருக்குறளப் படிச்சிட்டுத்தாம் தேநீரே குடிப்பாராம். தமிழர்கள் மேல ரொம்ப பாசம் உள்ளவராம். அவரு பேரு மானு சிங்காம். அவுரு பேரத்தான் எம் பேரனுக்கு பாரி வச்சிருக்கறனாம். அந்தப் பையனத்தான் மானு-ன்னு கூப்பிட்டண்டி பொன்னி.
@@@@@
பாட்டிம்மா எனக்கு இப்ப ஞாபகத்துக்கு வருதுங்க பாட்டிம்மா. அவுரு மானு சிங்கு இல்ல; மான் சிங் (Mann Singh). நம்ம கடலூரு மாவட்ட ஆட்சித் தலைவரா இருந்தாரு அவரு.
@@@@
ஆமாண்டி மானுன்னு தான் சொன்னாம் பாரி. நா நெனச்சிட்டேன் நம்ம தமிழ்ல இருக்கற மானுகூட சிங்கச் சேத்தி மானு சிங்குன்னு பேரு வச்சிட்டானோ என்னவோன்னு.
@@@@@!
இல்லீங்க பாட்டிம்மா. உங்க பேரம் பேரு தமிழ் மான் இல்ல. அது இந்தி மான்.
@@@@
எனக்கென்னடி தெரியும் அதப்பத்தி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mann = Little Monk, God is with us, heavenly, desire
Mann in German --- = wise man, wealthy
"". Italian ----. = warrior maiden, strong man.
In Finnish = army மண்
In French ----- = workers; village
Spanish. ------- = God is with us.

எழுதியவர் : மலர் (9-Dec-16, 5:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 267

மேலே