பேருந்தில் யானை

மக்கள் மட்டுமே பயணம் செய்வதா
ஓட்டுநரே ஒருநொடி நின்று சென்றிடுக !
நடத்துனரே காசில்லா நிலை கையிலே
வங்கிகள் வழங்கிடா நிலை இன்றோ !
தானியங்கி இயந்திரம் இயங்காத நிலை
நானிங்கே நடக்க முடியாத நிலையில் !
கருணையும் காட்டிடுக காட்டு வாசிக்கும்
காலையும் வாரிவிடாதே நாட்டு வாசியாய் !
நுழைந்திட முயல்கிறேன் காத்திரு அதுவரை
விரையாதே நீயும் விடமாட்டேன் உன்னையும் !
பழனி குமார்