என் தோழி !

பஞ்சாகி இதயம் நட்பால்
பழைய நினைவில் நனையும்போது
கனமாகி கண்கள் ஏனோ
கண்ணீர்தான் பிழிகிறதே ?

என் தோழி நீ அன்று
உன் துரோகி நான் என்றாய்
உன் துரோகி ஆனபோதும்
என் தோழி நீ இன்று

மூத்தவள் உன் அன்பினிலோ
முள்ளை வைத்ததும் யார் குணமோ?
முள்ளை வைத்த அன்பினிற்க்கும்
முல்லை வெண்மை பேர் வருமோ ?

கருத்துகள் வேறாகும்
கர்வமும் தூளாகும்
கவிதையில் நான் காண
கவலைகள் சீராகும்

வருத்தங்கள் உண்டெங்கோ
வரவேற்கும் மனநிலையில்
வசந்தங்கள் தினம் கொண்டாட
வாழத்தான் மனம் வேண்டும்

எண்ணங்கள் ஆயிரம்தான்
என்போன்றே நட்பினுக்கும்
இடையிடையே பிரிவிருக்க
இப்பிறவி முடியுமுன்னே

அவதூறு யார் சொன்னாலும்
அதற்காக பொறுமையின்றி
அன்று பட்ட அவசரத்திற்கு
அமைதியோடு காத்திருக்கிறேன்

என் தோழி நீ அன்று
உன் துரோகி நான் என்றாய்
உன் துரோகி ஆனபோதும்
என் தோழி நீ என்றுமே

எழுதியவர் : . ' .கவி (6-Jul-11, 9:57 am)
பார்வை : 1106

மேலே