அம்மாவின் இறுதி பயணம்

அம்மாவின் இறுதி பயணம்

அகவை 68-ல் அலை தழுவும் ஆசானின் காலடியில் சரணடைந்தாயோ..

ஆண்டது போதுமென்று ஆண்டவன் அழைத்தானோ!!

இங்கு போட்டது போட்டபடி கிடக்கையிலே உனைக் காண அவனுக்கென்ன அவசரமோ??

ஈரிலைகள் உதிர்ந்ததாலே இச்சாதாரிகள் கொட்டம் தொடங்கிடுமே!!

உலகமே உனக்காக அழுதிருக்க உன் மேனியிலே சொட்டு உண்மை கண்ணீர் விழவில்லையே - உன் மக்களின்

ஊற்றெடுத்த கண்ணீர் கடலோடு சங்கமித்து அலையாய் வந்துனைத் தழுவும்

எல்லையில்லா உன் அன்பின் விலை தான் உன் இறுதி பயணத்தின் மக்கள் வெள்ளம்

ஏனெடுத்தாய் இந்த அவதாரம் ஏற்றுக்கொள்ளாது எங்கள் மனம்

ஐயமில்லா உனதாட்சியில் - எங்கள் மனதில்

ஒளியாய் - ஒளி சிந்தும்

ஓவியமாய் ஜொலித்தாய் - வாழ்காலத்து

ஔவையம்மா நீ..

எழுதியவர் : ரஹமதுல்லாஹ் (10-Dec-16, 7:52 pm)
சேர்த்தது : RAHMATHOOLLAH M
பார்வை : 134

மேலே