மக்களெல்லாம் மாக்களாயினரே

மக்களெல்லாம் மாக்களாயினரே!
ஆரியம் வளர்த்த சாதியத்தால்
மானுடம் மறந்த மானிடனால்..
கோடி கோடியாய் செல்வமீட்ட
ஓடி ஓடி நாளும்திரிவதனால்..
இயற்கைத் தாயை நேசிக்காமல்
சிறிதும் அழிவை யோசிக்காமல்..
காற்றின் புயலும் பூமியின்
குலுக்கமும் கடலின் சீற்றமும்
கண்டாயோ! உன்னைநீயே இழந்தாயோ!
போதுமென்ற மனம் ஒன்றிருந்தால்
ஞாலமதை நீயும் வென்றிடலாம்..
செறிவறிந்துஉன் அறிவதை நீ
அறவழியிலே செலவு செய்யின்..
மாக்களாகா(து) நன்மக்களாகிடலாம்!
- ரசீன் இக்பால்