என்னவளுக்காக

என்னவளுக்காக...

கால் கொலுசுச் சிரிக்கும் சத்தம் கேட்டு...

நீயில்லை என்றால் நான் ஏற்பேனோ...

வளையல் சிணுங்கும் இசைகள் கேட்டு...

நீயில்லை என்றால் நான் ஏற்பேனோ

உன் சேலைத் தென்றல் தீண்டிய பின்னும்

நீயில்லை என்றால் நான் ஏற்பேனோ...


அடியே என் கருவாட்டி

என் கண்ண கில்லும் அழகே

கண் விழி எரியும் முன்னே

விழிகளில் தோனறாதா?

உன் அழகுக் காட்சிகள்...


அடி இராத்திரிச் சேவ போல நானும்

கண்ண விழிச்சிக் காத்துகிடக்க

கண்ணாடி போல கண்களும் ஏங்குதடி

காலையில் பூக்கும் உன் அழக காண...


கண் பார்வை இடறி விழுகுதடி ஏனோ

சில்லென தென்றலில் மாய மழையாய்

நீ விழுவதுனால் தானா?...

இரவும் பகலும் உன் கூந்தல் வாசமின்றி

இது சாபமோ...?

உன் கண் பேசும் ஊடலின்றி

என்னுள் என்ன சுகம் தோன்றுமோ...?

என் காதலும் மீளுமோ?

உன் பார்வையினிலே கண்ணே...

என் கனவுகள் களைவதும்

உன் பார்வையாலே பெண்ணே...

என் உயிரினில் கலந்த

உன் மூச்சினை நிறுத்த சொன்னா

என் உயிரும் மீளாதடிப் பெண்ணே...

நொடிகளும் வாழாதடி என் கண்ணே...


பூ பூக்காத மொட்டும்

பெண் தீண்டாதாத் தேகமும்

வாசங்கள் கொண்டதில்லை...

உயிர் போகும் முன்னே

நெஞ்சில் காதல் தீயினை ஏற்றி

உன் தேகப் பஞ்சோடு அனைத்துக்கொளடி...


என் கண் விழிகளில் நீர்தேக்கும்

உன் கானல் மேகம் வேண்டாம்...

அனல் தேகத்தில் குளிர் மழையாய் நீ வேணும்...

என்னை விரட்டும் மெளனங்கள் வேண்டாம்...

உன் சின்னச் சின்னச் சிரிப்பினில்

என் வாழ்க்கை ஈடேறும்...


செவ்வானம் மலரே

உன் வாசம் வீசுதடி மனசுகுள்ள

கடிவாளம் போட்டாலும்

மனம் துள்ளுரத நிறுத்த முடியலியே...

உன் கன்னக்குழியில்

எதோ மெளனமடி...

அது வாடாமல் களையாது

யேன் காதல் மேகம்...


நொடிக் கிடைத்தாலும் கொடியேன

சுற்றிக்கொள்வேன் உன்னையே

நீ இல்லாமல்

வாசமும், வண்ணமும்

என் வாசலில் இல்லை…

-அ.பெரியண்ணன்.

எழுதியவர் : அ.பெரியண்ணன் (12-Dec-16, 11:24 am)
Tanglish : ennavalukkaga
பார்வை : 390

மேலே