தாயின் தயை

தாயின் கல்லறையை தரிசித்துவிட்டுத்
திரும்பியபோது தடுக்கியது கல்...
பாலைப்பூ வாசம் வீசும் என்தாய்
விதைக்கப்பட்ட இடத்தில் சட்டென ஒரு
சப்தம் - "மகனே கவனம்" என்று...
நானும் புரிந்துகொண்டேன்,
தாய் உறங்கினாலும் அவள்
தயை உறங்குவதில்லை என்று..!
- ரசீன் இக்பால்