நக்கற நாய்க்கு ஓனராவது ஒதவாக்கறையாவது

எங்க ஏரியாவுல நெறையா தெருநாய்ங்க இருக்குது. அங்க திமிர் பிடிச்ச ஒரு பெரிய பணக்கார அம்மா இருந்தாங்க. பெருசா யாருக்கும் உதவியெல்லாம் பண்ணமாட்டாங்க. ஆனா இந்த தெரு நாய்ங்க எல்லாம் அந்தம்மா வீட்டை விட்டு கெளம்பி வேலைக்கு போறப்போ தெருவுல சுத்தி நின்னு அவங்க காலை நக்கிக்கிட்டே இருக்கும். அந்தம்மாவும் கொஞ்சம் கர்வத்தோட பிஸ்கட்டை தூக்கி வீசிட்டு போகும். இந்த நாய்ங்க அடிச்சி புடிச்சி சாப்புட்டு முடிச்சி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு நிக்குங்க. திடீர்னு ஒரு நாள் அந்தம்மா செத்து போச்சி. ஒரு மணி நேரம் சோகமா இருந்த அந்த தெரு நாயிங்க வயிறு பசிக்க ஆரம்பிச்ச உடனே அந்த வீட்டு வேலைக்காரம்மா காலை நக்க ஆரம்பிச்சிருச்சுங்க!!!

நக்கற நாய்க்கு ஓனராவது ஒதவாக்கறையாவது...

எழுதியவர் : முகநூலில்:மகேஷ் GVN (13-Dec-16, 9:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 288

மேலே