சின்னம்மா முதல்வரானால்

முதல்வரானால் இல்ல; முதல்வர் ஆகத்தாம் போறாங்க.
@@@
எப்பிடிடா அவ்வளவு உறுதியாச் (கன்ஃபாமா)* சொல்லற?
@@@@@
ஆளுங்கட்சியோட மூத்த தலைவர்கள் எல்லாம் ஒண்ணாக்கூடி பணிவோடு அம்மா மறஞ்ச துக்கத்தையும் அடக்கி வச்சிட்டு சின்ன அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டு "நீங்க தான் கழகத்தின் பொதுச் செயலாளரா இருக்கணும் . எங்க யாருக்கும் அந்த பதவிய ஏத்துக்கற தகுதி இல்லனு" சொனனாங்க.
@@@@
அத நானும் தொலைக் காட்சி செய்தில பாத்தேன். அடுத்ததா என்ன நடக்கும்?
@@@
என்ன நடக்குமா? அடுத்து சின்னம்மாவ முதல்வர் ஆக்கற வரைக்கும் கழக முன்னணித் தலைவர்கள் ஓயமாட்டாங்க.
@###
சரி அதுக்கப்பறம் என்ன ஆகும்?
@@@@@
உன்னோட ரோதன தாங்க முடில. சரி அதுக்கப்பறம் நடக்கப் போறத சொல்லறென் கேட்டுக்க.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கிடையே கடுமையான போட்டி ஏற்படும்.
@#@@
எதுக்கு?
@@####
யாரு மொதல்ல மாண்புமிகு சின்னம்மாவுக்கு டாக்டர் பட்டம் தர்றதுங்கற போட்டி தான்.
@@@
ஓ.. நீ அப்பிடி சொல்லறயா. நல்லது நடந்தா சரி.
#########################
அரசியல் விமர்சனம்.
//////////////////

*திரை, வானொலி மற்றும் அச்சு ஊடகத்திலும் தேவையில்லாமல் ஆங்கிலச் சொற்களைக் கலப்பதைத் தவிர்த்தல் நல்லது

எழுதியவர் : மலர் (14-Dec-16, 1:14 am)
பார்வை : 326

மேலே