மனதையும், உடலையும் கட்டுப்படுத்தும் வழிகளும், அதன் அவசியமும்

வருமுன் காவாதான் வாழ்வே பெருந்துயரம்...
அதன் உயரத்தில் எவரெஸ்டும் தோற்கும்...

திட்டமிடான் வாழ்வோ படுகுழி....
அதன் ஆழத்தில் கடலடியும் குறைவுதான்....

நற்காரியம் ஆற்றும் போது,
துன்பம் வந்தபின்பும் அதைப் பற்றி சிந்திக்காமல் தொடர்பவன் முரடன்...
அவனுடைய முரட்டுத்தனத்தில் சூறாவளியும் ஈடாகா...

சிந்திந்து செயலாற்றான் மூடன்...
அவனது மூடத்தனத்தால் பிறர்க்கு மூட்டைப்பூச்சியாகி தொல்லையாகிறான்....

மனிதனுடைய சக்திகளுக்கு கடவுளின் சக்தியே சமமாகாது...
இருப்பினும் மனிதன் தன்னை அறியாமலே சக்தியற்றவனாக இருக்கிறான்...

மனதை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் ஆயிரம் காட்டு யானைகளின் பலம் பெற்று விடுகிறது...
அதன் பிறகு அதைக் கட்டுப்படுத்துவதென்பது
காட்டாற்றில் வெள்ளம் வரும் போது அணை கட்ட முயற்சிப்பது போலாகும்...
ஆனால், மனதை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட்டால்,
அது நம் ஏவலாளாய் மாறிவிடுகிறது...

மனதைக் கட்டுப்படுத்தினால், உடலைக் கட்டுப்படுத்துவது மிக சுலபம்...

மனதைக் கட்டுப்படுத்துவதற்கு மனதை திசை திருப்பத் தெரிந்தாலே போதுமானது...
அதாவது, கெடுதல் தரும் கெட்ட எண்ணங்களில் இருந்து நல்ல எண்ணங்களுக்கு திசை திருப்புதல்...

நல்ல நிகழ்ச்சிகளை நினைவுகூர்தல்...

நல்ல காட்சிகளை மனதில் பதியவைத்தல்....

இதமான மெல்லிசை கேட்டு மனதை அதிலேயே லயித்திருக்கச் செய்தல்...

நல்ல அமைதியான இடம் சென்று, அங்கே தியானம் செய்தல்...

பிறர்க்கு நம்மால் இயன்ற உதவி செய்தல்...

பிறரை இழிந்துரைக்காதிருத்தல்...

மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாதிருந்தல்...

பணம், புகழ் என்று தேடி அலையாதிருத்தல்...

கடமையாற்றுதல், அதற்கான பலனை மட்டும் பெறுதல்...

எல்லாம் உண்மைப் பரம்பொருளே என்னும் சித்தங்கொள்ளல்...

பொய் பேசாதிருத்தல்...
கிண்டல், கேலியென பிறர் மனம் புண்பட பேசாதிருத்தல்...

போன்ற பல செயல்களில் மனதைக் கட்டுப்படுத்தலாம்...

தியானத்தில் சிறந்தது அறம் ஆற்றுதல்...

சிலர் குறுக்குவழிகளில் மன நிம்மதி பெற பல்வேறு தியானங்கள் செய்வார்கள்...
ஆனால், அவற்றால் அதிருப்தியே மிஞ்சும்...

தாயைக் கண்டவுடன் அழுகையை நிறுத்திவிடும் குழந்தை போல், நற்செயல்களாலும், நல்லெண்ணங்களாலும்
மனம் கெடுதல் நீங்கி நல்வழிப்படுதல் சாத்தியமாகிறது...

மனமானது நல்லவழிப்பட்டுவிட்டால்,
உடலானது தவறு செய்யத் தூண்டினாலும்,
மனதின் ஆளுமையால்
தவறானது தவிர்க்கப்படும்....

சோகம் வரும் போது, கண்களை சற்று தளர்வாக மூடிக்கொண்டு,
கருவிழிகளிண்ரடும் புருவமத்தியை நோக்கி இருக்க, ஒன்றிலிருந்து எண்ணத் தொடங்கி, அந்த சோகம் மறையும் வரை எண்ணிக் கொண்டே இருங்கள்...
இது மிகச் சுலபமான செய்முறை தான்...

எண்களை எண்ணுதலில் விருப்பமில்லையெனில்,
உங்கள் இஷ்டத்தெய்வதின் பெயர் அல்லது தங்களுக்குப் பிடித்தமானவரின் பெயர் அல்லது பிடித்த சுலோகத்தையொ மௌனமாக உச்சரியுங்கள்...

நிச்சயமாக மனம் அமைதி அடைந்து சாந்தமாக வீற்றிருக்கும்....

தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரை தொடருமென்பதே உண்மை...

உடலையும், மனதையும் தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பவனே உண்மையில் தனக்கு தானே சிறந்த அரசனாக விளங்கிறான்...

மனிதர்கள் மனசாட்சியையும், நீதியையும் இயற்பண்பாக கொண்டவர்கள்...

அறிவின் ஆளுமை எவ்விடம் ஒளிர்கிறதோ,
அவ்விடம் சந்தோஷமும் ஆனந்தமும் தாண்டவமாடுகிறது...

அறிவின் ஆளுமையென்பது பிறரை முட்டாளாக்குவதில்லை...
அறியாமையிலிருந்து பிறரை மீட்டெடுத்தல் ஆகும்...

நீங்கள் கடினமான தொழில் செய்ய வேண்டுமெனில் உங்களிடம் மன உறுதியுடன், உடல் வலிமையும் இருக்க வேண்டியது அவசியம்...

உடல் வலிமையை உடற்பயிற்சி செய்தல்,
யோகாசனம் செய்தல் என்று அதிகரிக்கலாம்...
அதைவிட முக்கியம் ஆரோக்கியமான உடலாக வைத்திருப்பதாகும்...
அதற்கு நல்ல ஆரோக்கியம் தரும் உணவை உண்ணுதல் அவசியம்...

ஆரோக்கியமான உணவால் உடல் வலிமையும், ஆரோக்கியமான எண்ணங்களால் மன வலிமையும்
அதிகமாகிறது...

தனது உடல் மற்றும் மனதை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருபவருக்கு ஐம்பூதங்களும் கட்டுப்படும்...

உறங்கி எழுவதினால் மட்டும் ஒருவர் ஓய்வெடுக்க இயலாது...
மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதால், மனம் ஓய்வு நிலையடைகிறது...

ஒரு கருவுற்ற தாய் தனது மனதில் எப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறாளோ,
அவ்வாறு தான் அவளது குழந்தை ஜீவிக்கிறதென்று அறிவியல் பூர்வமான ஆய்வு விளக்குகிறது...
அப்படியெனில் நல்லதொரு மனித சமுதாயத்தை உருவாக்கும் சக்தி எண்ணற்ற தாய்மார்களின் மன எண்ணங்களில் உள்ளது...
அவ்வாறிருந்தும் நாம் என்ன செய்கிறோம்???...

நாளும் ஏதார்த்தங்களென்று பல தீமைகளை ஆதரிக்கிறோம்...
நம் மனதில் அன்பைவிட அழிக்கும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது...
பெண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டங்களால் பல தாய்மார்களின் மனதை வேதனைப்படுத்துகிறோம்...

இதனாலேயே, சமுதாயம் அழிவுப் பாதையில் பயணிப்பதைக் காண முடிகிறது...

"இரத்தக்கண்ணீர்" என்னும் பழையத் திரைப்படப்பாடல் வரிகள், " குற்றம் புரிந்தவன் வாழ்வில் நிம்மதியென்பது கொள்வதேது?? ", என்ற வரிகளுக்கு ஏற்பத் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்..

இவற்றிற்கான காரணங்கள் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தாமை...
நல்லறிவு இருந்தும் அதைப் பயன்படுத்தாமை...
என்பனவாகும்....

சிந்தித்துப் பாருங்கள்... தெளிவு பிறக்கும்....

நன்றி....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Dec-16, 6:08 pm)
பார்வை : 834

மேலே