Amma

"என் தாய்"

கரு தணை நீ சுமந்து...
உதிரத்தில் என்னை நனைத்து....
உரு தணை எனக்கு அளித்து...
உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தாய்...

முதல் முறை!!!
கை கோர்தாய்!!!

கொண்டவன் துணை சேர...
ஈன்ற என்னை இன்னொருவள் கை சேர்த்தாய்..
தாய் அன்பு இதுவென்று மற்றொருவள் கற்றுத்தர
காலங்கள் உருண்டோடின ...
பூவான உன் குழந்தை பெண்ணாகி நின்று விட...

நாயகன் கை சேர்க்க...
இரண்டாம் முறை!!!
கை கோர்த்தாய்!!!

நலமோடு வாழ்ந்துவிட...
நான்கு பேர் துணை கொண்டு...
நாயகன் ஒருவனுடன் நாயகி கை கோர்க்க...
பெற்ற கடன் தீர்த்து விட்டு பெருமிதத்தில்
நீ திளைதாய்....
புகுந்த இடம் புதிதாக..
உறவுகளை குவித்துவிட..
கற்பனை கோட்டை கட்டி..
தலைவனின் அன்பிற்காய்...
பெண்ணான உன் புதல்வி தாயாக உயர்ந்துவிட...
இன்பத்தில் உந்தன் மனம் காற்றினில் மிதந்துவிட...

(ஈராண்டு கடந்து விட்டன.. )
வசந்தங்கள் இழந்து..
வலிதனை மறைத்து...
வாழ்க்கைதனை துளைத்து...

மூன்றாம் முறை!!!
உன் கை கோர்க்க!!! தவிப்பதை ஏன் மறுத்துவிட்டாய்

********** "என் தாயே...!!!!" **********

எழுதியவர் : (14-Dec-16, 11:05 pm)
பார்வை : 46

மேலே