ஐக்கூ

1.
படித்ததால் கொடுக்கவில்லை...
பணம் கொடுத்ததால் கிடைத்தது...
கல்லூரியில் பட்டம்...!!!
2.
கல்லூரியில் சேர்ந்தும் வாங்கவில்லை...
விளையாட்டில் சேர்ந்திட வாங்கினான்...
பட்டம்...!!!
3.
சிறகுகள் இல்லை...
வானம் நோக்கிப் பறந்தது...
நூலில் பட்டம்...!!!
4.
கல்லூரியின் முதல் மாணவன்...
பணம் கொடுத்தே வாங்கினான்...
பறக்கும் பட்டம்...!!!
5.
கடைகளில் விற்கவில்லை...
கல்லூரியில் விற்கின்றனர்...
பட்டங்கள்...!!!