கிருஷ்ணனின் உபதேசம்

"போற்றி வணங்க வேண்டிய பெண்குலத்திற்கு மனித சமுதாயம் துன்பத்தையும், அநியாயத்தையும், அவமானத்தயுமே விளைவிக்கிறது...

தாம் அறிந்த கதையினை புறக்கணித்து நடந்த சரித்திரத்தை காணுங்கள்!!...

எங்கும் அவலமே காட்சி தரும்...

ஒரு ஆண்மகனுடைய பொறாமை, பேராசை, அகங்காரம், பகைமை, இந்த தவறான குணங்களின் விளைவுகளையெல்லாம் ஸ்த்ரீயே அனுபவித்திருப்பாள்........

யுத்தத்தில் வீரன் வெற்றி அடைகிறான்...

யுத்த வெற்றியின் களிப்பிற்கு தோற்ற நகரத்தின் ஸ்த்ரீக்களின் கவுரவம் சூரையாடப்படும்...

ஆணாய்ப்பிறந்தவன் ஆணவம் கொண்டு சூது விளையாட்டில் ஈடுபடலாம்...

ஆனால் ஸ்த்ரீயின் நிலமை என்ன???

கணவன் அனைத்தையும் இழந்த பின் தவித்துக்கிடப்பது...

ஆணின் அகங்காரம் சிரம் உயர்வதால், பெண்குலத்தின் சுதந்திரமானது ஒடுக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படுவது ஏன்????

ஆண்மகனானவன் வாழ்வினில் தோற்று அகிலம் விட்டு பிரியும் நிலை ஏற்பட்டால், அதன் பிறகு தாயாக விழங்கும் ஸ்த்ரீயானவள் தன் பச்சிளங்குழந்தை பசியாற வாழ்வில் போராட்டத்தை சந்திக்கிறாள்.....

அகிலத்தின் அவலங்கள் அனைத்தயும் கணக்கிட்டால் தெள்ளத்தெளிவாய் ஒன்று தெரியும்...

ஆண்களால் பெண்கள் வாழ்வு துயரக் கடலில் மிதப்பது புரியும்...

ஏன் இது போன்ற ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்கினோம்????

மனித சமுதாயத்தின் ஒரு பாகம் இன்னொரு பாகத்தை வேரோடு சாய்க்க முயல்வது ஏன்???

இருப்பினும் பெண்குலத்தில் பிறந்த ஒருத்தி மனித சமுதயத்தினர் வருங்காலத்திற்கு வித்திடுகிறாள்....

அழகான ஸ்ருஷ்டியைக் காணுங்கள்...!!

பெரும் விருட்ச்சம் உருவாகவுள்ள இடத்திற்க்கு அருகே இறைவன் அழகான மலர்களை பூத்துக்குலுங்கச் செய்கின்றான்...

அச்சூழலை அவர் நறுமணம் கொண்டு நிறப்புகிறார்....

அவ்வாறிருக்க ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்க நல் சுகத்தையும், சந்தோசத்தினையும் விதைக்க வேண்டியது அவசியம் இல்லையா????

ஆனால் சமுதாயம் ஒளியை தோற்றுவிக்க முயலாமல் ஒளி பொறுந்திய ஸ்த்ரீயை ஒடுக்க நினைக்கிறது.....

அவமானங்கள், துயரங்கள், அநியாயங்கள், துன்பங்களையும், நெஞ்சில் சுமக்கும் ஸ்த்ரீ, ஒளிமயமான வருங்காலத்தை எவ்வாறு இந்த அகிலத்தில் தோற்றுவிப்பாள்?????

""நினைவில் நிறுத்துங்கள் இனி பெண்ணிற்கு அவமானம் ஏற்ப்படும் போதெல்லாம்.....

பெண்குலமானது துயரத்தில் மூழ்கும் போதெல்லாம்......

ஒரு ஸ்த்ரீயின் அலங்கரித்த கேசம் இழுக்கப்படும் போதெல்லாம்.......

அவள் வடிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் பார் கடலை விட ஆழம் என்பதை எடுத்துரைக்கும்.....

ஏதோ ஒரு ரூபத்தில் மஹாபாரதம் எனும் போராட்டம்..... தனது துவக்கத்தை நிகழ்த்தும்....""

சிந்தித்து செயலாற்றுங்கள்....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (16-Dec-16, 7:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 233

சிறந்த கட்டுரைகள்

மேலே