நற்பண்புகள் தீய குணங்கள்
தெய்வ அசுர சம்பத்விபாக யோகம் இருபத்தி நாலு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில்,
1. தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
2. அசுர சம்பத் (தீய குணங்கள்)
எனும் இரு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது
தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
1.மனம், மொழி, மெய் இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் செய்யாமை
2. மனமறிந்த உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தல்
3. செயல்களை செய்யும் போது, இது நான் செய்கிறேன் எனும் இறுமாப்பின்மை
4. கோபமின்மை
5. மனதை அலைபாயாமல் நமது கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாக இருத்தல்
6. பிறறை பழியாமை, குறை கூறாமை
7. புலன் நுகர்பொருட்களில் பற்றின்மை
8. உயிரினங்களிடம் பரிவு
9. பொலிவு,
10. பொறுமை,
11. மனஉறுதி,
12. புறத்தூய்மை,
13. பகைமை பாராட்டாமை மற்றும்
14. கர்வம் கொள்ளாமை
போன்ற இந்த நற்குணங்கள் அனைத்தும் தெய்வீக குணங்கள் (சம்பத்துக்கள்) என்று பகவான் கூறுகிறார்.
அசுர சம்பத் (தீய குணங்கள்)
1. பேராசை எனும் காமம்,
2. கோபம்,
3. பகட்டுத்தனம்,
4. ஆடம்பரம்,
5. தற்பெருமை,
6. இறுமாப்பு,
7. வெறுப்புணர்வு
போன்ற தீய குணங்கள் படைத்தவர்களே அசுர குணம் (சம்பத்) உடையவர்கள். இவர்கள் காமம், கோபம், பேராசை எனும் நரகத்தின் மூன்று வாயில் வழியாகச் செல்வார்கள்.
எனவே செய்யத்தக்கச் செயல்கள், செய்யத் தகாத செயல்கள் என்று எவைகள் சாத்திரங்கள் கூறியுள்ளதோ அதன்படி நமது செயல்கள் அமைய வேண்டும்.