சம்பவ நேரம் நல்லிரவு 9.33 முதல் 3.29 வரை

சம்பவ நேரம் நல்லிரவு 9.33 முதல் 3.29 வரை



இரவு நேரம் 9.33 க்கு ஈரோடிலிருந்து சேலம் செல்ல அரசுப்பேருந்து ஒன்றில் என் பயனத்தை துவங்கினேன். ஏரியதும் அருகில் அமர்ந்த நன்பரும் யானும் ஒருவரையொருவர் அரிமுகப்படுத்திக்கொண்டு பயனித்தோம்.
நண்பர் நகைச்சுவையாய் பேச இருவரும்
சிரித்துக்கொண்டே சென்றோம். நேரம் கடந்ததே தெரியவில்லை.
மிகவும் அருமையான நிகழ்வுகள் .
பேருந்தில் ஏரிய ஐந்து நிமிடத்தில் சேலம் வந்ததுபோல் உணர்வு பார்த்தால் நேரம் 11.22. நன்பரும் நானும் வாழ்த்துக்கள் சொல்லி கை குழுக்கி பரிந்தோம்.
திடீரென இடம் வேரு அனிந்த உடை வேரு .விழிகள் கானும் யாவும் விசித்திர தோற்றம் . மருகனம் ஏதோ ஒரு பேருந்துவில் பயனித்துக் கொண்டிருக்கிறேன். என்கு செல்கிறது என்று தெரியவில்லை .பேருந்திலும் 5 நபர்கள் மட்டும் தான் ஓட்டுனர் நடத்துனர் நான் மற்றும் இரண்டு தம்பதிகள்... நடத்துனர் பணத்தை எண்ணிக்கொண்டு நின்றிருந்தார். இரு தம்பதிகளும் பேருந்தின் நடு பாகத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர். நானும் தலைசாய்ந்தேன்... மெல்லிய இதமாண குளிர்ந்த காற்றோடு கூடிய மழைத்தூவல் ஆங்காங்கு பல்லைக்காட்டும் மின்னல்கள்.. அமைதியான மென்மையான இனிமையான பயனம் .திடீரென பயங்கர சத்தத்துடன் கூடிய அதிர்வு. அதிச்சிரியில்
எழுந்தேன் அப்போது சம்பவ நேரம் நல்லிரவு 1.43 .நடத்துனரும் ஓட்டுனரும் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை .நான் பயனித்துக்கொண்டிருக்கும் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதியவாரு தரைபுரண்டு கிடந்தது என்ன ஒரு ஆச்சர்யம் எனக்கு எந்த ஒரு சிறிய காயமோ அடியோ எதுவும் ஆக
வில்லை எதுவுமே நம்ப முடியவில்லை.
இரு தம்பதிகள் இருந்தார்களே என்னானார்கள் என்று மனம் பதர
தலைதெரிக்க பார்க்க ஓடினேன்.
பேருந்து முழுக்க இரத்தச் சிதறல் . அதனைப் பார்க்க மணதில் தைரியம் இல்லை .ஆனாலும், அருகில் சென்றேன் இரத்த வெள்ளம். அனால் யாரும் அங்கு
இல்லை எல்லாம் மாயையாய் இருந்தது..
எணக்கோ எங்கு செல்லப்போகிறோம்
எதற்க்காக போகிறோம் என்று என்னிக்கொண்டிருந்தேன் .பல கற்பனைகள் எண்ணங்கள் பயங்கள்
நடுக்கங்கள் அனைத்தும் என்னை
சூழ்ந்தது... மழை சற்று கூடுதலாய் ஊற்றத்தொடங்கியது . கைபேசி கைக்கடிகாரம் மற்றுமே மிஞ்சிய நிலையில் ...எனது நடை பயனத்தை
தொடங்கினேன். நேரம் 2.57 மழையோடு
பாடிக்கொண்டு நகர்ந்தேன் . போகப்போக போய்க்கொண்டே இருக்கிறேன்.
அதிவேக மின்னல்களுடன் மழை அதிகரித்தது .சிரிது தூரம் கடந்ததும்
அழுகைக் குரல் ! சந்திரனின் சூழலில் மூழ்கப்பட்ட நான் அந்த நல்லிரவில் அழுகைக்குறல் கேட்டதும் பயம் நடுக்கம்! நேரம் 3.05, என்ன செய்வதென்று தெரியவில்லை. கடவுள் பாடல்களை பாடிக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தேன் . இடி மின்னல்கள் அதிகரித்து.. இடி என்றாலே பயம். எல்லாம் என்னை கைகோர்த்து பின்னியவாரு பீதியை உண்டாக்கியது . சிறிது தூரத்தில்
ஓர் அழகிய கன்மனி , ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இரு தம்பதிகள்.
அவர்கள் இருவரும் என்னுடன்
பேருந்தில் பயனித்தவர்கள் போல் இருந்தது... கொட்டும் மழையில் அவர் கால்களைப் பிடித்து கெஞ்சி கதறி அழுதுகொண்டிருந்தது. இரக்கமற்றவர்கள் அந்த பூப்போன்ற கன்மனியை கீழே தள்ளி
உதரிவிட்டு வேகமாய் சென்றுவிட்டார்கள். நேரம் 3.14
அந்த கன்மனி தன் பிஞ்சுக்கைகளால் தன்
இரு விழிகளையிம் கசிக்கிக்கொண்டு கீழே விழுந்தபடி அழுது கொண்டிருந்தது...
பார்த்ததும் கண் கழங்கி ஓடி அந்த கன்மனியை எடுத்து என் தோளில் சுமந்தபடி உன் பெயர் என்னவென்று கேட்டேன்... அந்த பிஞ்சுக்கிளி தன் அழகிய குறலில் மைனா என்றது .அருமையான
பெயர்.. அந்த மைனாவிற்கு 7 வயது மட்டுமே இருக்கும். அந்த சிறிய வயதிலும் தன் தாய் பிரசவ வழியால் துடித்துக்
கொண்டிருக்கிறார் . என் தந்தை கொஞ்சம் கூட பொருப்பில்லாமல் குடியே கதியென்று வழக்கம்போல் இன்றும் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிக்கிடக்கிறார்..
என் அம்மாவின் துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை .இந்நிலையில்
யாரேனும் உதவுவார்களா என்று அம்மாவை தைரியம் சொல்லி மெல்ல
அழைத்து வந்தேன் வெகு தூரம் வந்ததால் மேலும் அம்மாவால் நடக்க இயலவில்லை..
இந்த கார் ரொம்ப நேரம் நின்றதைப் பார்த்து அம்மாவை மழையில்
நனையாதவாறு ஒரு மரத்தடியில் உட்கார
வைத்துவிட்டு ஓடி வந்து அவரிடம் உதவி கேட்டேன் மருத்துவிட்டார். எங்களுக்கு உதவ யாரும் இல்லை தயவு செய்து நீங்களாவது எங்களுக்கு உதவுங்களேன் ப்ளீஸ் ப்ளீஸ் என்றது ... என் மனம் உடைந்தது என் இரு விழிகளிலும் கண்ணீர்த் துளிகள் அறுவியாய்க் கொட்டயது ...அக்குழந்தை பேசியதில் வியந்தேன் நான் நினைவு தெரிந்து அளவில்லா கண்ணீர் விட்ட நாள் ..என்ன
ஒரு ஆச்சர்யம் இந்த சிறிய வயதிலே
இவ்ளோ அறிவும் உதவ வேண்டும் என்ற
மனப்பாண்மையும்.!!!. அப்போது நேரம்
3.18. பின்பு அந்த குழந்தையை தோழில்
கோர்த்தபடி உன் அம்மா எங்கே என்று
கேட்டு போனோம் பார்த்தால் முன்பு கேட்ட
அதே அழுகைக் குறல்... அப்போது தான்
நினைத்தேன் கடவுள் பெண்மனிக்கு
உதவவும்அந்த அழகிய
கன்மனியின் தரிசனம் கிடைக்கவே
விளையாடியுள்ளான் என்று... பின்பு
அந்த தாயிடம் மருத்துவமனைக்கு
இன்னும் எவ்ளோ இடைவெளி என்று கேட்டேன் .. இன்னும் 3 to 4, மயில் தூரம் என்று சொன்னார். விலாசமறிந்து 108க்கு
அழைப்பு விடுத்தேன். அப்போது 3.21 நேரம், அடுத்த ஆறு நிமிடங்களில்
ஆம்புலன்ஸ் வந்தது. நான் பயனித்து வந்த
பேருந்தில் காணாமல் போன ஓட்டுனரும் நடத்துனரும் உதவிக்காக மருத்துவ உடையில் வந்திருந்தனர்..
மீண்டும் வியப்படைந்தேன்!...
பின்பு அந்த பெண்மனியை ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த கன்மனி
ஓடிவந்து என் கையை இழுத்தது பின்பு தன் இரு கைகளையிம் உயர்த்தி
என்னை எடுத்துக்கொள்ள சொன்னது .
என் கழுத்தோடு இரு மலர் கொடிகளாகிய
கைகளக் கோர்த்து என் கன்னத்தில் முத்தமிட்டது. நான் கொடுத்து வைத்திருந்ததுபோல் அன்பு முத்தம் !...
அந்த இறக்கமற்றவர்களுக்கு கிடைக்காதது எனக்கு கிடைத்து... அதிர்சி
அருகில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் சத்தமில்லாமல் மறைந்து.. திடீரென்று
முன்பு கேட்ட பயங்கர விபத்து சத்தம்.
இருவரும் ஓடி பார்த்தோம் .அம்புலன்ஸ் மற்றும் நான் முதலில் பயனம்வந்த சேலம்
பேருந்தும் நேருக்கு நேர் மோதி நொருங்கிக்கிடந்தது... அக்குழந்தை அம்மா என்று ஆம்புலன்ஸ் உள்ளே ஓடியது...அதிர்ச்சியில் நானும்
ஓடினேன் பார்த்தால் அங்குமிங்குமாய்
உடல்கள் சிதரிக்கிடந்தன. மறுநொடி யாரோ என் விரல்களைப் பிடித்ததுபோல் உணர்ந்தேன். திரும்பி்ப் பார்த்தேன் .என் பயனத்தில் யார் யாரை எல்லாம்
சந்தித்தேனோ அவர்கள் எல்லாம்
இரத்தத்தில் குழித்துவிட்டு வந்தது
போலும் உடல்கள் சிதரியபடி சிரித்த
வண்ணம் என்னைப் பார்த்ததுபோல்
நின்றனர் ... பயத்தில் அம்மா என்று கத்தினேன் ... என் தாய் எழுந்து என்னப்பா
கெட்ட கனவு ஏதும் கண்டாயா என்றார்.
ஓ கனவா என்று எழுந்தேன் இதயம்
வேகமாய் துடித்தது வியர்வை ஊற்றியது... நிஜ வாழ்வில் நடந்ததுபோல்
உணர்ந்தேன். நேரம் 3.29... கனவு தான் ஆனால் சிந்திக்க வேண்டியது. நான் ஒரு
கருத்தைப் புரிந்து கொண்டேன்...



தொடரும்,

ரா. சுரேஷ.

எழுதியவர் : ரா. சுரேஷ் (18-Dec-16, 2:00 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 317

மேலே