திருஇரு - மனம்
சார் " சமையல் எல்லாம் முடிஞ்சிருச்சு மாப்பிள வீட்டுக்காரங்க எப்ப வேணும்னாலும் சாப்பிட வரலாம் என்கிறார் " கணேஷ் கல்யாண வீடுகளில் சமைப்பவர் " அப்படிங்களா ரொம்ப நல்லது இன்னும் ஒரு அரை மணிநேரத்திற்கு அப்புறம் எல்லோரும் சாப்பிட வந்திடுவாங்க " என்றார் மணப்பெண்ணின் அப்பா மூர்த்தி அப்புறம் கணேஷ் " மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் சாப்பாடு "? " ஓ அது தனியா எடுத்து வெச்சிருக்கேன் அவங்க சாப்பிட வரும் போது நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் கணேஷ் .
(எல்லோரும் உணவு அருந்திவிட்டு சென்றனர் எல்லோருக்கும் உணவு மிகவும் பிடித்திருந்தது மாப்பிள்ளையை தவிர ..)
" கணேஷ் எல்லோருக்கும் உணவு பிடிச்சிருந்தது ஏன் நானும் சாப்பிட்டேன் ரொம்ப நல்லா இருந்துது ஆனா மாப்பிள்ளை மட்டும் எனக்கு பிடிக்கவில்லைன்னு சொன்னாரு அவருக்கு வேற சாப்பாடு ஏதாவது கொடுத்தீர்களா" என்றார் மூர்த்தி " இல்லைங்க எல்லோரும் சாப்பிட்டது தான் அவருக்கும் கொடுத்தேன் " ஆனால் " என இழுத்தார் கணேஷ் " ஆனால் என்ன சொல்லுங்க " என்று ஆர்வத்தோடு கணேஷிடம் பதிலை எதிர்பார்த்தார் மூர்த்தி அது ஒன்னும் இல்லீங்க மாப்பிள்ளை பொண்ணுகிட்ட " எனக்கு அம்மா இல்ல அதனால அப்பாவோட சமையல் தான் வீட்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் வெளியில சாப்பிடுவேன் அப்பாவுக்கும் வாங்கிட்டு வந்திடுவேன் கல்யாணத்துக்கு பிறகுதான் உன் கையால் சாப்பிடணும்னு சொன்னார் அதனாலதான் அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் கொஞ்சம் காரமும் உப்பும் அதிகமா போட்டேன் என்றார் " கணேஷ் " எதற்க்காக அப்படி செய்தீர்கள் என்றார் " முர்த்தி " இல்லீங்க நாளைல இருந்து உங்க மாப்பிள்ளை உங்க பொண்ணு சமையலை சாப்பிடப்போறார் உங்க பொண்ணு எப்படி சமைக்கும்னு எனக்கு தெரியாது கண்டிப்பா இன்னைக்கு நான் மாப்பிள்ளைக்கு கொடுத்ததைவிட நல்லா சமைப்பாங்க அப்படி உங்க மாப்பிள்ளை சாப்பிடும் பொழுது அவருக்கு என்னோட சமையல் நினைவுக்கு வராது அப்படி வந்தாலும் என்ன திட்ட தோணுமே தவிர உங்க பொண்ணோட சமயல திட்ட மாட்டார் அதுக்காகத்துனான் அப்படி செய்தேன் என்றார்" கணேஷ்
பெண் நன்றாக வாழ வேண்டும் என்று அந்த கல்யாணத்திற்கு வரும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள் அதையும் மீறி சண்டையிட்டு பிரிந்து செல்ல நினைக்கும் "கணவன் மனைவி" இது உங்களுக்காக பிரியும் முன் உங்கள் திருமணத்தில் சமைத்தவன் கூட வந்தவர்கள் உங்களை வயிறார வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறானே தவிர அவன் சமையலை பாராட்டவேண்டும் என்பதற்காக அல்ல ...சிந்தியுங்கள் பிரியும் முன்...
" விட்டுக்கொடுத்து போவது கோழைத்தனம் அல்ல இதயத்தின் பெருந்தன்மை "