சிமமாந்த ங்கோசி அடீச்சீ

ஏண்டா பொன்னா (பொன்னன்)
உம் பொண்ணு பொறந்து ஒரு வாரம் ஆகுது. அவப் பொறப்ப நகரசபை அலுவலகத்தில பதிவு பண்ணீட்டயா?
@@@@@
இன்னும் அவ பேரையே முடிவு செய்யலம்மா.
@@@@
இதிலென்னடா சிரமம். நம்ம தமிழ் மக்கள் எல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கு சினிமா ரசனையில இந்திப் பேருங்களத்தானே வைக்கிறாங்க. நீயும் அதே மாதிரி வாயில நொழையாத அர்த்தம் தெரியாத எதாவது ஒரு இந்திப் பேர வைக்கலாமே. அதிலெ என்னடா பொன்னா கொழப்பம்?
@@@@
உம்..ம். இப்ப நினைவுக்கு வந்திருச்சும்மா. ஒரு நைஜீரிய நாட்டு பெண் நாவலாசிரியர். அவுங்ககூட சமீபத்தில நடந்து முடிஞ்ச அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலைப் பத்தி ஒரு புத்தகம் எழுதப் போறதா இந்து நாளிதழில் படிச்சேன். அவுங்க பேரையே பாப்பாவுக்கு வச்சிடலாம். தமிழர்களப் பொறுத்தவரை இந்தியும் நைஜீரிய மொழியும் ஒண்ணுதான். ரண்டுமே நமக்குத் தெரியாது. அர்த்தம் தெரியாத இந்திப் பேர வைக்கறதும் அர்த்தம் தெரியாத நைஜீரிய மொழிப் பேர வைக்கறதும் ஒண்ணுதாம்மா.
@@@@@
சரி, சீக்கிரம் சொல்லுடா பொன்னா.
@@@@@
சிம்மாந்த ங்கோசி அடீச்சீ.
@@@@
சரி, சரி. நீ எந்தப் பேர வச்சாலும் என் வாயில நொழையப் போறதில்ல. சரி நீ சொன்ன பேரையே பாப்பாவுக்கு வச்சிடு. நா எஞ் செல்லப் பேத்திய அடீச்சீ, அடீச்சி-ன்னே கொஞ்சிகக்குவேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

Chimamanda Ngozi Adichie.

எழுதியவர் : மலர் (18-Dec-16, 4:51 pm)
பார்வை : 172

மேலே