இன்றுவரை தொடரும்

கதிரவன் மறைந்தாலும்
காலையில்
காணலாம்......கண்ணே
நீ...... மறைந்தால்
மரணித்தே
போவேனடி.......!!

ஒட்டுமொத்த
உசிரும் உன்னிடம்
தானே.....உனையன்றி
வேறிடம்
உலகில் வேறில்லை
எனக்கு......!!

என் காதல்
நீதான்
எக்காலமும்
நீயேதான்......என்
வானமும்
வாழ்க்கையும்
வாழும்வரை
வாழ்வேன் உன்னோடு.....!!

நேரில்
பார்த்திட
நெஞ்சம்
கெஞ்சுது.......தூரம்
துயரம்
சேர்ந்து
தோல்வியென
ஆனதே......!!

கனவில்
உன்
குறும்புகள்
கரும்பென
இனித்தது.....
கனவென்று
அறிந்து
மொனித்தது
மனது......!!!

மயிலிறகால்
அடித்தாலும்
மார்படைத்து
போகும்.....
உந்தன்
நினைவுச்
சண்டைகள்
நிம்மதியாய்
நிம்மதி இன்றி......!!!

உன்
பார்வைத்
தென்றலில்
போர்வைத்
தூக்கம்
சிவராத்திரி......
இன்றுவரை
தொடரும்
சில ராத்திரிகள்......!!!

வருகிறாய்
போகிறாய்
சுவடுகள்
இல்லை.....
நான்
சொர்க்கத்திலும்
இல்லை......ஏன்
விட்டுப்போனாய்
வேதனைகளை
மட்டும்
என்னிடம்......????

எழுதியவர் : thampu (19-Dec-16, 2:27 am)
Tanglish : inRuvaRai thodarum
பார்வை : 307

சிறந்த கவிதைகள்

மேலே