விடியல் உனக்காக

விடியல் உனக்காக....

இரவுகள் மட்டும் உன் இடமல்ல...
விடியல்களும் உனக்கான படிக்கற்கள் தான்...
காமுகன் உன் கற்பை களவாடினாலும் பெண்மை இழக்காத கன்னி நீ...
புதுமைகள் செய்யலாம் காலடி வை புதுமை பெண்ணாய் நீ...

கண்ணில் ஈரம் வேண்டாம் நெஞ்சில் வீரம் கொண்டிடு...
பணிந்தது போதும் துணிந்தெழு...
உதயம் தரும் பெண்மையாய் நீயும் விழித்தெழு...
அடிபணிந்த காலங்கள் சாம்பலாகட்டும்..
இனி வரும் காலங்கள் உனை சரித்திரம் போற்றட்டும்...

இருள் வாசம் வேண்டாம் வாழ்வில்...
புது ஒளி வீசட்டும் உனக்குள்..
முடிந்தவை மண்ணில் புதையட்டும்
உனக்கான விடியல்கள் விண்ணில் பிறக்கட்டும்...

குனிந்தது போதும் நிமிர்ந்தெழு நீயும்
இனிவரும் விடியல்கள் உனக்காக...
புதிய பாதைகள் திறக்கட்டும்
உன் காலடி பதிந்த இடமெங்கும்
பூட்டுகள் உடைந்து புது வசந்தம் தோன்றட்டும்....

எழுதியவர் : அன்புடன் சகி (19-Dec-16, 3:05 pm)
Tanglish : vidiyal unakaaga
பார்வை : 2186

மேலே